வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்!

 


வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் இளைஞர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்திருந்த சமயத்தில் அவ்விடத்திற்கு வருகை மேற்கொண்ட மற்றொரு இளைஞர் குழுவினர் அவ் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வர்த்தக நிலையத்தின் தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு தெரிவித்து சென்றனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே கடந்த மூன்று வாரங்களுக்குள் 6 க்கு மேற்பட்ட குழு மோதல்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.