நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது

 


தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற  ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி சாந்தபுரத்திலிருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் பெண்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. அவர்கள் மூதாட்டி ஒருவரிடம் தங்கச் சங்கிலி அச்சுறுத்தி வாங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நகைகளைப் பறிகொடுத்த நால்வரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்களது கொள்ளைக்கு உதவிய பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் பயணித்த வான் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.