நேற்றைய விபத்தில் விரிவுரையாளர் மரணம்!!

 


யாழ். கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உயிரிழந்துள்ளார்.


கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.


கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.


சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.