மின்சார வேலியில் சிக்கி 2 சிறுவர்கள் பரிதாபச் சாவு!!

 


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையில் பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்குண்டு இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.


இருவரும் 13 வயதுடையவர்கள் என்று சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


றியாஸ் முஹம்மட்  ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் ஆகிய சிறுவர்களே பரிதாபகரமாக மரணித்தனர்.


குறித்த சிறுவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காணியொன்றில், விறகு சேகரிப்பதற்கு இன்று மதியம் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.


தென்னந்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டே இவர்கள் சாவடைந்தனர்.


இந்தச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.