முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நகைச்சுவை நடிகர்!!

 


பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நகைச்சுவை  நடிகர்  வெற்றி பெற்று விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளமை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.


5 மாநில தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் ஒரு நகைச்சுவை  நடிகர் என்பது தான் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது.


ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில்  நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய இவருக்கு  தற்போது நடிகர் மட்டுமின்றி பாடகர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்  உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அவர் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இவர் பதவியேற்க உள்ளார். முதலமைச்சர் என்றால் சாமானியர் என்று தான் பொருள் என்று கூறியுள்ள அவர், தனது முதலமைச்சர் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடக்காது என்றும்  கிராமத்தில்தான் நடக்கும் என்றும்  கூறியிருப்பது அபாரமான ஆரம்பமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.