இந்தியா டீசல் இறக்கப்பட்டது!

 


இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகுதி நேற்று முன்தினம் (20) கொழும்பு துறைமுகத்தில் பெறப்பட்டு, அதை இறக்கும் பணி நேற்று (21) இடம்பெற்றதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் எம்.ஆர்.டபிள்யூ.சொய்சா தெரிவித்தார்.

35,000 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்ததடைந்தாகவும் கொலன்னாவ சுத்திகரிப்பு நிலையத்தில் டீசலை இறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதகவும் அவர் குறிப்பிட்டார்.

பெறப்பட்ட டீசல் உடனடியாக ரயில்வே தாங்கி வசதியின் மூலமாக உடனடியாக  விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விநியோகத்தின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் டீசல் வரிசைகள் முடிவடையும் என்றும் மேலும் 20,000 மெற்றிக் தொன் டீசல் தொகுதி அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாட்டை வந்து சேரும் என்று அவர் குறிப்பிட்டார்.

தங்களிடம் போதியளவான பெற்றோல் சேமிப்பு முனையத்தில் உள்ளதாகவும் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தேவையான அளவு விநியோகிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.