மேலதிக கல்வி வகுப்புகளுக்கான கட்டணங்களும் இரண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

 


நாட்டில் நிலவி வரும் கடதாசி தட்டுப்பாடு, தொடர்ந்து அமுலில் உள்ள மின்வெட்டுக்கு மத்தியில் மேலதிக வகுப்புகளுக்கான கட்டணங்களும் இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக இரத்தினபுர மாவட்ட பாடசாலையின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

புலமைப் பரிசில், உயர்தர, சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்கள் போன்றவற்றை அச்சிட்டு வழங்குவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையாலேயே  மேலதிக வகுப்புகளுக்கு அதிகளவான கட்டணங்களை அறிவிட தீர்மானித்துள்ளதாக மேலதிக வகுப்புக்களை நடாத்தி வரும் ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடதாசிகளைப் பயன்படுத்தி வினாத்தாள்கள் போன்றவற்றை அச்சிடுவதற்கு அதனை நகல் எடுப்பதற்கான கட்டணங்கள் 200 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் காணப்படும் மின்வெட்டால் அச்சுநிறுவனங்கள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தியே அச்சுப் பணிகளை மேற்கொள்வதால் அதிகளவான கட்டணங்களை அவர்கள் அறிவிடுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை மின்வெட்டு காரணமாக மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் தற்போது தாம் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி வருவதாகவும், மேலதிக வகுப்புக்களுக்கான கட்டணங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் அந்த ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.