ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்!!

 


சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடனான   கலந்துரையாடல்  இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை (20) மட்டக்களப்பில் இடம் பெற்றது.


மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டு நாட்கள் கொண்ட  கருத்தரங்காக இது இடம் பெற்றிருந்தது. பொறுப்புணர்வுடன் கூடிய விதத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் தகவல் துறை தொடர்பான அறிவினை பயன்படுத்துதல்,டிஜிட்டல் உரிமைகள் சமூக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான மனித உரிமைகளுடன் இயற்கையாகவே இணைந்து இருப்பதுடன் பிரிந்து வேறுபடுத்த முடியாத அளவுக்கு அந்த உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அங்கீகரித்தல் எனும் குறிக்கோளுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.


  கருத்தரங்கு முடிவில், ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவனங்களின் பொறுப்பு, சிவில் அமைப்புக்களின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பு, சமுக வலைத்தளங்களின் பொறுப்பு  பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


இந்நிகழ்வில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்,  சமூக ஊடக பாவனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


                                                                                        


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.