வைகோ கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம்

 


அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பணி இடங்களுக்கு ஆள் சேர்ப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதா? 

 

வைகோ, சண்முகம் கேள்விகளுக்கு மாநிலங்கள் அவையில் 

அமைச்சர் அளித்த விளக்கம்.

 

கேள்வி எண் 1616

 

கீழ்காணும் வினாக்களுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் அளிப்பாரா? 

 

1 அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தென் மண்டல மையங்களில், பல்வேறு பணி இடங்களுக்கு, முறைகேடாக ஆள் சேர்த்தது தொடர்பாக, அரசுக்கு ஏதேனும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள், பகுதி வாரியாக மற்றும் பணி இடங்கள் குறித்த தரவுகளைத் தருக. 

 

2. இது தொடர்பாக, அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வேலை தேடுவோர் இடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த தரவுகளைத் தருக.

 

3. கடந்த மூன்று ஆணடுகளில் நடைபெற்ற தேர்வுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதா? அந்தப் பணி இடங்களை நிரப்புவதற்காக, புதிய தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டதா? 

 

கல்வித்துறை இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்கார் அளித்த விளக்கம்

 

1,2 வினாக்களுக்கு விளக்கம்

 

அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில், சில பணி இடங்களுக்காக சில ஏமாற்றுப் பேர்வழிகள்  போலியாக நேர்காணல்கள் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்தன. 

உடனே, அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை, கழகத்தின் இணையதளத்திலும் பதிவு செய்து இருக்கின்றது. அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இத்தகைய ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதை, அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கின்றது. 

 

இது தொடர்பாக, கழகம் அளித்த குற்றச்சாட்டின் பேரில், காவல்துறையினர் 8 பேரைக் கைது செய்து இருக்கின்றனர். 

 

3. இல்லை.

 

திறன் அலைபேசி பயன்படுத்தும் குழந்தைகள்

வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்

 

கேள்வி எண் 1759 நாள் 16.03.2022

 

மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், கீழ்காணும் வினாக்களுக்கு, விளக்கம் தருவாரா? 

 

1. கொரோனா முடக்கத்தின்போது, குழந்தைகள் அலைபேசி கையாள்வது பெருகி இருக்கின்றதா? அதனால், இணையதளங்களுக்கு அடிமையாகி இருக்கின்றார்களா? அவ்வாறு இருப்பின், முடக்கத்திற்கு முன்பும், பின்பும் அதுகுறித்த தரவுகள் ஏதேனும் இருக்கின்றதா?

 

2. இந்தப் பிரச்சினையில், ஏதேனும் மாநில அரசுகள் கவனம் கொண்டு, குழந்தைகளுக்கு உளவியல் அற உரைகள் வழங்கி இருக்கின்றதா? அவர்களுடைய இணையதள செயல்பாடுகளைக் குறைப்பதற்காக, நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றார்களா? 

 

3. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்

 

4. இல்லை என்றால், எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? 

 

அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த விளக்கம்

 

1 முதல் 4 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம். 

 

உறுப்பினர் கேட்டு இருக்கின்ற தரவுகள் எதுவும் அரசிடம் இல்லை. இருப்பினும், தேசிய குழந்தைகள் உரிமை காப்பு ஆணையம், அலைபேசிகள் இணையதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் அவர்களுடைய உடல் நலம், நடத்தை மற்றும் சமூக உள இயலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டு இருக்கின்றது. 

 

அந்த ஆய்வில், 23.80 விழுக்காடு குழந்தைகள் உறங்குவதற்கு முன்பு, படுத்துக்கொண்டே, திறன் அலைபேசிகளைப் பயன்படுத்துகின்றார்கள்/ வயதுக்கு ஏற்ப, 37.15 விழுக்காடு குழந்தைகள், எப்போதும் அல்லது அடிக்கடி திறன் அலைபேசிகளைப் பயன்படுத்துவதால், அவர்களுடைய கவனம் குறைகின்றது. இந்த ஆய்வு குறித்த தரவுகள்,   https://ncpcr.gov.in என்ற இணைப்பில் கிடைக்கின்றன.


‘தாயகம்’                                     தலைமை நிலையம்
சென்னை - 8                               மறுமலர்ச்சி தி.மு.க.,
17.03.2022

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.