வட்ஸ்அப்பில் புதிய வசதி!!
டெலிகிராம் செயலியில் 1.5 GB வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும். வாட்ஸ்அப் செயலியில் வெறும் 100MB வரையிலான ஃபைல்களைத்தான் அனுப்ப முடியும். இதனால் வாட்ஸ்அப்பில் பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாமல் பயனர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் 2GB வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை தனது அடுத்த அப்டேட்டில் கொண்டுவரவுள்ளது.
இந்தப் புதிய அம்சம் தற்போது ஆப்பிள் iOS தளத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் கசிந்துள்ளன.
இந்தச் சோதனை தற்போது அர்ஜென்டினாவில் உள்ள iOS பயனர்களிடம் நடத்தப்படுகிறது. விரைவில் இந்தப் புதிய அப்டேட் உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாட்ஸ்அப் சாட்டை (chat) ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு பேக்கப் எடுத்து மாற்றும் புதிய அப்டேட்டும் வரவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் சாட் ஐ-போனிலிருந்து சாம்சங் போன்களுக்கு மாற்றும் அனுமதியை வழங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை