தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பரிசளிப்பு விழா - 2022

 

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 27-03-2022, ஞாயிற்றுக்கிழமையன்று கரோ லெசர் சென்ரர் பைரன் மண்டபத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழா காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் தொடங்கப்பட்டது. இவ்விழாவுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட கிட்டத்தட்ட 10,000இற்;கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவில் 2021 வளர்தமிழ் நூல்களின்  தமிழ்;மொழிப் பொதுத் தேர்வில் வளர்தமிழ் 1 – வளர்தமிழ் 12 வரை அதிதிறன் (90-100) பெற்ற  875 மாணவர்கள்  மதிப்பளிக்கப்பட்டனர். வளர்தமிழ் 10, 11, 12 நிறைவு செய்த 153 மாணவர்களும், 2021 தமிழ்த்திறன் போட்டிகளான பேச்சு, திருக்குறள், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற 115 மாணவர்களுக்கும்   மதிப்பளிக்கப்பட்டு  பரிசளிப்பும் நடைபெற்றது. மேலும் பேச்சு, திருக்குறள் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மேடையில் தமது பேச்சையும்  திருக்குறள்களையும்  வழங்கியிருந்தனர்;.  அத்துடன் சிறப்பு நிகழ்வாக வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பும் மதிப்பளிப்பும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் 1143 மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். 


மண்டபத்தில் வளர்தமிழ் நூல்களான வளர்தமிழ் அறிவோம், வளர்தமிழ் பதினொன்று பயிலல் வளநூல் என்பவற்றுடன் ஏனைய வளர்தமிழ் நூல்களையும்; பெற்றோர்கள,; ஆசிரியர்கள் அதிகளவில்  பெற்று கொண்டனர்.

இவ்விழா 8 வது ஆண்டாகத் தொடர்ந்து நிகழ்வதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் எனக் கலந்து கொண்டமையும்  வளர்தமிழ் நூல்களின் அகத்தியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பணியையும் உணர்த்தி நிற்கிறது.


இளையோர்களே நமது வருங்காலத் தூண்கள்; அஞ்சல் ஓட்டம் போன்று தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடப்பாடு உடையவர்கள். இவர்கள் விழா மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும்  நேர்த்தியாகவும் தமது பணிகளை ஆற்றினர்.
 
வளர்தமிழ் நூல்களைப் பயன்படுத்தும் பள்ளிகளின் நிர்வாகிகள்  பல இடர்களுக்கு மத்தியிலும் மாணவர்களின் இடையறாத, தொடர்ச்சியான தமிழ்மொழிக் கல்வியைப் பெற உறுதுணையாக நிற்பவர்கள். இவர்கள்; மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கிச் சிறப்பித்தனர். இவர்களுடன் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளையின் செயற்பாட்டாளர்களும் வழமை போல மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர்;. 

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள், இணைக்குழு உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள,; பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், இளையோர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பரிசளிப்பு விழா 18:30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது. 

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.