நிவாரணப் பொதியைப் பெற முண்டியடித்த மக்கள்

 


சதொச நிறுவனம் வழங்கப்படும் நிவாரணப் பொதியைப் பெற, அதிகளவானோர் ஹட்டன் சதொச விற்பனை நிலையத்தில் காத்திருந்தனர்.

 இன்றிலிருந்து குறித்த நிவாரணப் பொதி வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த நிவாரணப் பொதியில் நாட்டரிசி 5 கிலோ கிராம், சம்பா அரிசி 5 கிலோகிராம்,  ஹைலன்ட் பால் மா 400 கிராம் பெக்கட் ஒன்று, 1 கிலோகிராம் சீனி, தேயிலை 100 கிராம் என்பன உள்ளடங்குவதாகவும் ஹட்டன் சதொசி நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நிவாரணப் பொதி 1950 ரூபாய்க்கே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.