கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த

 


காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளை முன்வைத்து காலி முகத்திடலுக்கு முன்பாக தற்போது எதிர்ப்பில் ஈடுபட்டு வருபவர்களுடனான கலந்துரையாடலுக்கு பிரதமர் தயாரென பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், நாட்டின் தற்போதைய சவாலான நிலைமையை வெற்றிகொள்வதற்கு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் பெறுமதியான கருத்துக்களை கேட்டறிவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு தயாரெனின், அவர்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.