355 பேருக்கு ஆசிரிய நியமனம்!!


 கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களில் 355 பேர் மாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் , ஆண்டுதோறும் கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர்களாக பாடசாலைக்கு நியமனம் பெறும் சமயம் கடந்த ஆண்டுகளில் எமது மாகாணத்திற்கு 250  முதல் 300 வரையான ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். 


இதனால் நாம் முன்கூட்டியே இந்த ஆண்டு வன்னிப் பாடசாலைகளின் தேவை கருதி அதிக ஆசிரியர்களை எண்ணிக்கை வாரியாக கோரியிருந்தோம்.  இதன்பயனாக 18 பாடங்களிற்கான 355 ஆசிரியர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு நியமிக்கப்பட்டு அவர்களின் பெயர் விபரங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 


இதே நேரம் இந்த 355 ஆசிரியர்களுக்கும் மேலதிகமாக வடக்கு மாகாணத்தில் உள்ள  தேசிய பாடசாலைகளிற்கும் சில நூறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.