ஈழத்தமிழ் ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு!

 


ஈழத்தமிழ் ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த 09.04.2022 சனிக்கிழமை லு புர்ஜே (le bourget) நகரில் சிறப்பாக நடைபெற்றது .குறித்த நிகழ்வை அவருடன் பணியாற்றிய நண்பர்கள் ஏற்பாட்டில் தமிழன் மின்னிதழ் ஒழுங்கமைத்து இருந்தது .


ஈழத்தமிழ் ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 09.04.2020 அன்று கொரோன பெருந்தொற்று காரணமாக இலண்டனில் சாவடைந்திருந்தார் .ஊடகவியலாளர் ஆனந்தவர்ணன் அவர்கள் கிளிநொச்சி பூநகரியில் பிறந்தவர் என்பதோடு இவரது தந்தையாராகிய தில்லைநாதன் அவர்கள் முன்னாள் கிளிநொச்சி ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியவர்.பூநகரி பிரதேச சபை உறுப்பினராக இருந்த ஆனந்தவர்ணன் அவர்கள் புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது .பிரான்சில் இயங்கி வந்த  TTN தேசிய தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். ஈழத்து ஊடக பரப்பில் ஆளுமை மிக்க ஒரு இளம் ஊடகவியலாளரை பறிகொடுத்து இருப்பது எமக்கு பேரிழப்பாகும்.இந்நிலையில் ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மாலை 03.00 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது .தொடர்ந்து ஆனந்தவர்ணன் அவர்களின் திருவுருவ படத்திற்கான நினைவுச்சுடரினை அவரது மாமாவான துரைசிகம் காயசிந்தன் அவர்கள் ஏற்றி வைக்க இன்னொரு மாமாவான துரைசிங்கம் துஷ்யந்தன் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர் . தொடந்து நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவரும் மலர்வணக்கம் செய்து சுடர் வணக்கம் செய்தனர் . தொடர்ந்து திருமதி மஞ்சுளா ஆசிரியரின் மாணவிகளின் நடனம் இடம்பெற்றது .அதன் பின் நினைவுரைகள் இடம்பெற்றது .நினைவுரைகளினை உடகவியலாளர்களான ஜஸ்ரின் தம்பிராசா , மோகனதாசன் விநாசித்தம்பி, வினோஜ் இகவிஞர் ஈழபாரதி, ஆசிரியர் வாணி தியாகராஜா ஆகியோர் ஆற்றினார் .நினைவுரைகளை ஆற்றியவர்கள் வர்ணனின் ஊடக சேவையை பாராட்டியதோடு தமிழர் தம் ஊடக செயற்பாடுகள் தொடர்பாக தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர் . தாயகத்தில் இருந்து ஆனந்தவர்ணனின் தந்தை மற்றும் சகோதரியின் நினைவுரைகள் திரையில் ஒளிபரப்ப பட்டது தொடர்ந்து ஆனந்த வர்ணனின் நினைவாக சிறப்பு வெளியீடாக இந்த மாதத்திற்கான தமிழன் மின்நூல் வெளியீடு செய்யப்பட்டது. நூலினை பார்வையிட இங்கே அழுத்தவும். (https://online.pubhtml5.com/eqbd/prqj/ )


குறித்த நிகழ்வில் ஆனந்தவர்ணன் உறவினர்கள், நண்பர்கள், சக ஊடக அன்பர்கள் மற்றும் பிரான்சு கலைபண்பாட்டுக்ம் கழகம் பிரான்சு மாவீரர் பணிமனை தேசிய தொலைக் காட்சியின் ( TTN ) முன்னைநாள் பொறுப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி தொகுப்பினை ஊடகவியலாளர் பார்த்தீபன் தொகுத்து வழங்கி இருந்தார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.