கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்!

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது.
பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே.
அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான்.
விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி. தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக அமைந்தது .
முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும்போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன.
அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.
இந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.
அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் சிங்களப் படையின் நச்சு குண்டு தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.
“ நாடு காக்கும் பெரும் புலி.. நட்பு போற்றும் வரிபுலி
நாள்முழுக்க விடுதலைக்கு விழித்திருக்கும் அவர் விழி
அண்ணன் கிட்டு படையணிக்கு அழகு சேர்த்தவர்
ஆட்ற்று முழங்கும் வெடி தேரை அமைத்து தந்தவர்
பகைக்கு மட்டும் எப்போதும் நன்கு தெரித்தவர்
படைகள் வெல்ல பேராற்றல் கருவி தந்தவர்…”
ஆனந்தபுரத்தில் உலகம் வியக்க போர் புரிந்து வீரவரலாறான தளபதிகள், போராளிகள், அனைவருக்கும் வீரவணக்கம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.