மூதாட்டியின் காதுகளை துண்டாடி நகை அபகரிப்பு


 பொத்துவில் பசரிச்சேனை பிரதேசத்தில் வீடு புகுந்து 70 வயது மூதாட்டியின் இரு காதுகளையும் துண்டாக்கி, தங்க நகை அபகரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதாட்டியின் கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ள மூதாட்டி, ஆபத்தான நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.