ஊடகவியலாளர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு
மீரிஹான பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, முல்லைத்தீவு ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களால் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது .
கறுப்புக் கொடிகளை பறக்க விட்டும் கண்டனங்களை வெளிப்படுத்தும் பதாதைகளை தாங்கியவாறும் முல்லைத்தீவு ஊடகவியாளார்கள் இந்தக் கவனயீர்ப்பை மேற்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹான வீட்டின் முன் கடந்த மாதம் 31ஆம் திகதியன்று போராட்டமென்று முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் அறிக்கையிடலுக்காக சென்ற தென்பகுதி ஊடகவியலாளர் பலர் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்துள்ளதோடு, நான்கு ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .
அத்தோடு, இந்தத் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவு ஊடக அமையத்தினரால், “எமது சகோதர ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சதனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனும் தலைப்பில் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை