மட்டு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அரச செலவினத்தை முகாமை செய்தல் தொடர்பான கலந்துரையாடல்!!📸


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச செலவினங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது. 


இதன்போது பொது நிதியை மிகவும் பொறுப்பாகவும், சிக்கனமான முறையிலும் பயன்படுத்தும் அதே வேளை, பொதுமக்களுக்கு வினைத்திறனான  தேவையை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் நிதி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.


இந்த சவால்மிக்க சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அரசின் வருமானத்தினை அதிகரிப்பது மிக முக்கியமான தேவையாக இருப்பதுடன், அரசாங்க வருமானத்தினை அதிகரிக்க எடுக்கும் கால நேரத்தைக் கருத்திற் கொண்டு, பொதுச் செலவினங்கள் மிகவும் இறுக்கமானதாக இருக்க வேண்டும். இதனை மிகவும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே செலவு செய்தல்வேண்டும் என்று இதன்போது மேலும் அறிவுறுத்தப்பட்டது.


இவ் விடையம் தொடர்பில் மாவட்ட செயலக  உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று கிளை தலைவர்களுக்கு இதன்போது தெரிவிக்கப்பட்டது.


இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதம கணக்காளர் இந்திராவதி மோகன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளை தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.