பாரதியார் பொன்மொழிகள்!


1.தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்.

2. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.

3. செய்வதை துணிந்து செய்.

4. அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.

5. நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை.

6. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும்.

7. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.

8. நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.

9. எந்தச் சூழ்நிலையிலும் மற்றவருக்கு நீ தாழ்ந்துவிடதே. அவ்வாறு தாழ்வது அவமானத்திற்குரியதாகும்.

10. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

11. நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.

12. எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்.

13. பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை!

14. கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.

15. வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.