மதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை
கலேவெல, மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை