எரிவாயுவை பெற்றுக் கொடுக்க முடியாது

 


விலையை அதிகரிக்காவிட்டால் எரிவாயுவை பெற்றுக் கொடுக்க முடியாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தற்போது நாங்கள் வங்கிகளுக்கு 1 பில்லியன் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளோம். இவை அனைத்தும் சேர்ந்து சுமார் 1.4 பில்லியன் ரூபாய் ஆகும். மேலும் சுமார் 2.4 பில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளோம்." "எனவே சரியான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யாவிட்டால், எமக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய இயலுமை இல்லை... "தற்போது எரிவாயு இல்லாமல் சுமார் 1.5 மில்லியன் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு நாம் கட்டாயமாக எரிவாயுவை வழங்க வேண்டும். மற்றொரு பகுதியினர் விறகினை பயன்படுத்துகின்றனர். இது ஒரு நாளில் ஏற்பட்ட நெருக்கடி இல்லை. "எனவே, இந்த தொடர் பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதற்கு நாங்கள் தியாகம் செய்ய வேண்டும் என்பதை பொதுமக்களிடம் தெளிவாகக் கூறுகிறோம்." "ஒரு கேஸ் சிலிண்டரைக் கொண்டு வரும் போது 4,500 ரூபாவுக்கு மேல் வௌிநாட்டிற்கு செல்கிறது. "இதைத் தடுக்க நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் சரியான விலையைப் பெறுவதுதான். அது இலாபம் ஈட்டுவது அல்ல. விலை திருத்தத்திற்குச் செல்ல வேண்டும். விலையை உயர்த்தாமல் இந்தப் பிரச்சனைக்கு வழியில்லை." எனவே, அரசு அதனை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விலையை உயர்த்தாவிட்டால், எரிவாயுவை வழங்க வழியில்லை. "முன்பு முன்மொழியப்பட்ட விலை திருத்தமும் இலாபம் இல்லாமல் தயாரிக்கபட்டதுதான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.