100 வயது முதியவர் கின்னஸ் சாதனை!!

 


பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை மட்ட ஊழியராக பணிக்குச்சேர்ந்த வால்டர் ஓர்த்மேன் என்ற 100 வயதான முதியவர்  84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 


அங்கு சிறப்பாக பணியாற்றியதால், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது விற்பனை மேலாளராக உள்ள அவர், தற்போது 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்.


கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இவருக்கு சக ஊழியர்கள் மற்றும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நூறு வயதிலும் உற்சாகத்துடன் பணியாற்றும் அவர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என உற்சாகத்துடன் கூறுகிறார். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.