வானில் ஒளிரும் GotaGoHome!


இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) ஆர்ப்பாட்டக்கார்களால் ஜனாதிபதி செயலகம் முன்னால் கோ கோம் கோட்டா என்றவாறாக ஒளிக்கற்றைகள் ஜனாதிபதி செயலக முகப்பில் ஒளிரும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த ஒளிக்கற்றைகளை மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்றையதினம் GotaHomeGota என்றவாறு ஜனாதிபதி செயலக வளாகத்தின் மேல் ஒளிக்கற்றைகளால் வானில் தெரியும்படியாக ஒளியை வீசியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.