இரசாயன உரம் வழங்காதமை தவறு என கூறும் ஜனாதிபதி!


சர்வதேச நாணயநிதியத்தை முன்னதாகவே இலங்கை நாடியிருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை அரசாங்கம் மீண்டும் வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ள நிலையில் மாற்றங்களை முன்வைக்க தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என கடந்த காலங்களில் ஜனாதிபதி விடாப்பிடியாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.