மைத்திரிக்கு அதிர்ச்சியளித்த சுரேன் ராகவனின் அதிரடி முடிவு!


அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக சுதந்திர கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார்.

இந்நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் இரண்டாவது உறுப்பினரும் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்றமையினால் சாந்த பண்டார, கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் கடந்த வாரம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில்,

  1. G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

3. அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க

4. லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

6. இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

7. சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

8. சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்

9. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

10. சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

11. பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

12. டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

13. டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

16. அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

17. கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்

18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

19. கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

20. கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்

21. சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.