ஆரோக்கியமான உணவு!

 

ஆரோக்கியமான உணவு

உடல்நலத்துக்கு முக்கிய மானது ஆரோக்கியமான உணவு. இதய நோய்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்துக்கு நல்லது. பீன்ஸ், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் பொருட்கள், இறைச்சி, மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் கூடுமானவரை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள். நிறை கொழுப்பு, நிறைவுறாக் கொழுப்பு ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அல்லது தவிர்த்துவிடுவது நல்லது. ஆனால், அதற்காக முற்றிலும் கொழுப்புச்சத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. பாதாம், அக்ரூட், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதயத்திலுள்ள கெட்ட கொழுப்புச்சத்தைக் குறைக்க இந்த உணவுப்பொருட்கள் உதவுகின்றன.

ஒருநாளில், ஐந்து அல்லது பத்து முறை பழங்கள், காய்கறிகளைக் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சூரை (Tuna), சல்மன் (Salmon) ஆகிய மீன் வகைகளை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய நோய் ஆபத்தைக் குறைக்கலாம். மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது. கட்டுக்கடங்காத மதுப் பழக்கம் இதயத்துக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.