மைத்திரியை சந்தித்த சஜித்

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன்று (10)  சந்தித்தார்.

அத்துடன், அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 எம்.பிக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்பதே மக்களின் அடிப்படைக் கோரிக்கை எனவும் எல்லா இடங்களிலும் இது ஒரு முக்கிய செய்தி எனவும் மைத்திரி தெரிவித்துள்ளார்.

எனவே, ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும் என்ற மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய பிரதமரைக் கொண்ட இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.