பொலிஸாரின் தீடீர் அறிவிப்பு

 


இந்த பண்டிகைக் காலத்தில் பெருமளவிலான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருவதால், அவ்வாறு வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.


குறிப்பாக காலிமுகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் அதிக நெரிசல் ஏற்படக்கூடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதிகளில் நாளை (08) பிற்பகல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வாகன சாரதிகள் அந்தப் பகுதிகளுக்குப் பதிலாக வேறு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.