சமீரா- ஷெரிஃப் குழந்தை குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி!

 


சின்னத்திரை நடிகர்களான சமீரா- ஷெரிஃப் தங்களது குழந்தை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது குறித்து தேவையில்லாமல் பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு’ சீரியல் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் ஷெரிஃப்பும் சமீராவும். இருவரும் காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போது இவர்களுக்கு அர்ஹான் என்ற குழந்தையும் உள்ளது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீராவும், ஷெரிஃபும் தங்களது குழந்தையின் மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை பகிர்ந்து வருகின்றனர். இதோடு வியாபார நோக்கத்தில் இன்ஃப்ளூயன்ஸ் ஆக்டிவிட்டியும் சமூக வலைதளங்களில் குழந்தையோடு செய்து வருகிறார்கள். இது தான் இப்பொழுது பிரச்சனையாக மாறி இருக்கிறது.


நல்ல கமெண்டுகளை போலவே வழக்கம் போல நெகட்டிவான கமெண்டுகளையும் பலரும் பகிர்ந்தனர். ’குழந்தையை வைத்து பிச்சை எடுக்கறீர்களா? உங்களுக்கு நடிக்க வாய்ப்பு இல்லையா?’ என்ற ரீதியில் நெகட்டிவ்வான பல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

இது போன்ற நெகட்டிவ் கமெண்டுகளுக்கு ஷெரிஃப் தற்போது பதிலளித்துள்ளார்.

‘உங்களது நெகட்டிவ் கமெண்டுகளை நாங்கள் பார்க்காமல் இல்லை. இது போன்ற கமெண்ட் கொடுக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் கிடையாது. உங்கள் ஒவ்வொருவரின் கமெண்ட்டையும் நாங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளோம். இந்த ஒரு முறை மட்டும் உங்களுக்கான நேரம் கொடுக்கிறோம். நீங்களே எங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விலகி விடுங்கள். இல்லை என்றால் சைபர் க்ரைமில் உங்கள் ஒவ்வொருவர் மீதும் புகார் கொடுப்போம்’ என கூறியுள்ளார்.

சமீராவும் இதை உறுதிப்படுத்தும் நோக்கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘நாம் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்க தான் இங்கு இருக்கிறோம். அதை விடுத்து தேவையில்லாத பேச்சுகளை நீங்கள் கொடுத்தால் முன்பு போல நான் கேட்காமல் இருக்க மாட்டேன். இதை மனதில் வைத்து கொள்ளுங்கள்’ என சைபர் கிரைமின் இன்ஸ்டாகிராம் ஹேண்டிலையும் தனது வீடியோவில் டேக் செய்துள்ளார் சமீரா.

ஆதிரா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.