ஜனாதிபதியிடம் மருத்துவ சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!


இலங்கை மருத்துவ சங்கத்தினர்  ஜனாதிபதி கோட்டபாயராஜ ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். 


நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் தொடர்பில் அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.


 அரச மற்றும் தனியார் சுகாதார சேவை நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறித்த கடித்தில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.


சாதாரண சத்திர சிகிச்சை போன்ற சேவைகள்  தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் 


அத்துடன் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சில நோய்களுக்கான சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது நாட்டிற்கு ஆரோக்கியமான விடயம் அல்ல எனவும் மருந்துகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் இல்லாவிட்டால் அவசர சிகிச்சை நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.