கோட்டாவுக்கு எதிராக போராடும் மக்களின் நெகிழ்ச்சியான நிலை!


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த 10 நாட்களாக காலி முகத்திடலில் கூடாரங்களை அமைத்து வரகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன பாகுபாடின்றி மூவின மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் சமய தலைவரகள் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வெறும் தரையில் படுத்துறங்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சங்களை நெகிழச்செய்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து பலர் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து பதவி விலகியிருந்தனர்.

எனினும் தாம் பதவி விலக்கப்போவதில்லை ஆணித்தரமாக கூறிய ஜனாதிபதி கோட்டாபய , மக்களின் போராட்டங்களை புறக்கணித்து இன்று புதிய அமைச்சரவையை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.