புன்னகை முகம்!


குழந்தை சிரிக்கும் நேரம்

அறுந்து சிதறியது
முத்துமணி மாலை.

*****

மொட்டு மலர்ந்ததும்
அழகோ அழகு பூவின் புன்னகை முகம்.

*****

எதிரியின் கைக்குச் சென்றதும்
என் துப்பாக்கி
குறி பார்க்கிறது என்னை.

*****

நண்பகல் நேரம்
வெயிலில் காய்கிறது
சூரியன்.

*****

தூளியில் ஆடும் குழந்தை
அறுந்த இழையில் ஆடும்
வலை பின்னும் சிலந்தி..

                             நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ் 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.