கடமை தவறாத மௌனம்!


வார்த்தைகளின்

பெருங்கூட்டத்தில்
மௌனத்தை காவலுக்கு
வைத்திருக்கிறார்கள்.
மௌனத்தின்
காவலைத் தகர்த்து விட்டு
கவிதையோடு விளையாட
வார்த்தைகளுக்கு விருப்பமென
அறிய முடிகிறது என்னால்.
காலத்தின் முடிச்சினை
இறுகப்பற்றி
கடவுளிடம் வரம் கேட்டு
கட்டாயத் தவமிருக்கிறேன்.
யார் கெட்டால் என்ன?
எது எப்படிப் போனால் என்ன?
என்று இயல்பை மீறி
இருக்க முடியவில்லை
கடமை தவறாத மௌனத்தால்...!

                                        நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.