புதிய வியூகத்தை கையிலெடுக்கும் ’கை’


 அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, நாட்டில் நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான சுயாதீன உறுப்பினர்கள் மாற்று வெளித்திட்டமொன்றை கையாள தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டின் பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களையும் அரசாங்க எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாம் இன்று ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் அல்ல, எதிர்கட்சி உறுப்பினர்களும் அல்ல. நாம் சுயாதீனமாக எமது கருத்துக்களை முன்வைத்து அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே நினைக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்தால் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் செயற்பாடுகளை பலப்படுத்திக்கொண்டு எமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொண்டு எமது அணியை மேலும் பலப்படுத்தவே நினைக்கின்றோம் என்றார்.

தமிழ் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பரந்த அளவிலான வேலைத்திட்டமொன்றை கையாளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த நிலைமையில் தனித்து செல்லாது.11 கட்சிகளின் ஒத்துழைப்புகளுடன் சிறுபான்மை கட்சிகள், அமைப்புகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொண்டு எமது தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.