வீதி விபத்தில் இளம் டேபிள் டென்னிஸ் வீரா் பலி

 


மேகாலயாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரரான விஷ்வா தீனதயாளன் (18) உயிாிழந்துள்ளாா். 83-ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த பாரவூ தி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி இந்த விப்து ஏற்பட்டதாக தொிவிக்கப்பட்டள்ளது.

விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் சாரதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன்
படுகாயமடைந்த மேலும் 3 வீர‌ர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனத் தொிவிக்கப்பட்டள்ளது.

காயம் அடைந்த மூன்று வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.