சங்கரி சிவகணேசன் எழுதிய "உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" கவிதை நூல் அறிமுகவிழா!!
புத்தூர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சங்கரி சிவகணேசன் அவர்கள் எழுதிய "உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" கவிதை நூல் அறிமுகவிழா 03.04.2022 சுவிசின் சப்கவுசன் நகரில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மூத்த பெண் படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஜெனீவா தமிழ் இலக்கிய பேரவைத் தலைவரும் எழுத்தாளருமாகிய அன்பிற்குரிய திருவாளர் க. அருந்தவராஜா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மூத்த ஊடகவியலாளரான திருவாளர் சண் தவராஜா மற்றும் எழுத்தாளர் குடத்தனை உதயன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
சுடரேற்றி கடவுள் வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஆய்வுரையினை ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும் சிறப்புரையினை திருவாளர் க. அருந்தவராஜா அவர்களும் வாழ்த்துரையை மூத்த ஊடகவியலாளரான திருவாளர் சண் தவராஜா அவர்களும் அறிமுக உரையினை எழுத்தாளர் குடத்தனை உதயன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
"உன் நிலம் நோக்கி நகரும் மேகம்" கவிதை நூலினை அன்னை ஆதிலட்சுமி அவர்கள் வெளியீடு செய்து வைக்க சப்கவுசன் (schaffhausen) மாநில வைத்தியக்கலாநிதி திருமதி ஜனா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தமிழ் பற்றாளர்கள், இலக்கிய உறவுகள், முகநூல் நண்பர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை