கூகுள் வரைபடத்தில் தலையில்லா உருவம்!!

 


தலையில்லாத ஒரு உருவம் வீதியில் நடந்துசெல்வது போன்ற புகைப்படம் கூகுள்  வரைபடத்தில்  பதிவாகி  இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் நேவி என்ற பகுதியில், அந்த நாட்டின் கப்பல் படைக்குச் சொந்தமான மிகப்பாதுகாப்பான ஒரு இடத்தில் இந்த உருவம் பதிவாகியுள்ளது.


 2021 மே மாதத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பாரியளவில் காணப்பட்ட காலத்தில் அந்த உருவம் பதிவாகியுள்ளது. 


மனிதர்களற்ற வெற்று வீதியில் ஆடுவதும் ஓடுவதுமாக இந்த உருவம் பதிவாகியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.


இது தொழிநுட்ப கோளாறினால் ஆனதா அல்லது கணினிக் குறும்பர்களால் உருவாக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் தெளிவாக தகவல் வெளிவரவில்லை. இருப்பினும்  நடிகர் பிரபுதேவாவின் நடன அசைவுகளுடன் அதன் தோற்றம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.