முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மணி

 


அனைத்து தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பங்கேற்றார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கலந்துரையாடல் யாழ் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

 குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மணிவண்ணன் ஆதரவு யாழ் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோர் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.