ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது

 


யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர்  கோப்பாய் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் சனிக்கிழமைகைது செய்யப்பட்டார். இசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


ஊரெழு பகுதியில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில். குறித்த நபரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து. 500க்கும் மேற்பட்ட போதை மருந்துகள் மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.