அடுத்த வார மின்வெட்டு அறிவிப்பு!!

 


அடுத்த வாரத்தில் இரு நாட்களுக்கு மின்வெட்டுக்கு விடுப்பு விடப்பட்டுள்ளது எனினும் ஏனைய நாட்கள் தொடர்பான மின்துண்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 10.45 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


அத்துடன், 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் நாட்டில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க அறிவித்துள்ளார்.


எனினும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள்  2 மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.