வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

 


வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வெங்காயத்திற்கு ஒருவர் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது, மற்றொருவர் மின்சார வயரின் உதவியுடன் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, மின்சார வயரில் இருந்து மின் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடார். எனினும் அவர் மின்சாரம் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

22 வயதுடைய செல்வராசா கேதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.