உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி முன்னோட்டம்

 


அனுபவ் சின்ஹா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்திய சினிமாவை அதிரவைத்த 'ஆர்டிகிள் 15' திரைப்படம் தமிழில் உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் டீசரும் வெளியானது.

வரும் மே 12ம் தேதி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன், 13ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் வெளியாகவுள்ள சூழலில் 20 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி’ வெளியாகிறது. இந்த நிலையில் நேற்று(9.5.2022) நெஞ்சுக்கு நீதி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் புகழ்பெற்ற "நெஞ்சுக்கு நீதி" தமிழக அரசியல் வரலாற்றுடன் இந்திய அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்திய புதினம். அதனால் உதயநிதியின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் என்பதை கடந்து வணிகரீதியான வெற்றியும், வெகுஜனங்களை திரையரங்குகளுக்கு அழைத்து வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது படத்தின் முன்னோட்டத்தில் அதிகார வர்க்கம், சாதிய கட்டுமானங்கள் குறியீடுகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம்

“எல்லோரும் சமம்னா யாரு சார் ராஜா?” என்று தொடங்கும் முன்னோட்டத்தில் “எல்லோரும் சமம்னா யாரு ராஜா ஆகிறது?” என்ற கேள்வியுடனேயே நிறைவடைகிறது. இரண்டு நிமிட முன்னோட்டத்தில் இரண்டுமுறை வரும் இந்தக் கேள்வியின்போது சட்டப் புத்தகத்துடன் இருக்கும் அம்பேத்கர் சிலை காட்டப்படுகிறது. எல்லோரும் சமம் என்றால் அதிகாரம் செய்யும் ராஜாக்களுக்கு இங்கு வேலையில்லை. மக்கள்தான் ராஜா. சட்டம்தான் ராஜா. ஜனநாயகம்தான் ராஜா என்பதை அம்பேத்கர் சிலையும் கையில் இருக்கும் சட்ட புத்தகமும் குறியீடாய் பார்வையாளனுக்கு உணர்த்துகிறது.

“நம்மளை இங்க எரிக்கத்தாண்டா விடுவாங்க எறிய விடமாட்டாங்க” என்கிற வசனம் சாதிக்கொரு சுடுகாடு என்றிருக்கும் நிலபிரபுத்துவ ஆதிக்க மனப்பான்மையை அடையாளப்படுத்துகிறது.

’அவங்கக் குளிச்சி அழுக்காகாத தண்ணி நாங்கக் குடிச்சா அழுக்காகுமா சார்?

நீ ஆக்குன சோத்தை எங்க வூட்டு பசங்க சாப்பிடணுமாக்கும்? அதை உங்க வூட்டு பன்னிகளுக்கு போடுறதோட நிறுத்திக்கோ”

”செத்தது ரெண்டு தலித் பொண்ணுங்க விசாரணை நேர்மையா இருக்கும்ங்களா?” போன்ற வசனங்களும் காட்சிகளும் தமிழகத்தில் பட்டியலின மக்கள் படும் துயர சாட்சியாய் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

”அவங்கவங்களை அவங்க இடத்துல வைக்கணும் சார்” என்று வரும் வசனத்தின்போது கூண்டில் இருக்கும் அம்பேத்கர் சிலை காட்டப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, உலகிலேயே நீண்ட அரசியல் சாசனம், அதுவும், உலகிலேயே ‘சமூக நீதி’ என்னும் வார்த்தை இருக்கும்படி அரசியல் சாசனமியற்றியவரும் இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான அம்பேத்கர் சிலை கூண்டில்தான் இங்கு இருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்பதை காட்சிகளாலேயே பொது சமூகத்தினரின் மனதையும், அரசியல்வாதிகளையும் துளைத்தெடுக்கிறது.

கூண்டில் அடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையுடன் பெரியார் சிலையும் அடைக்கப்பட்டு சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை கடந்துபோகும் ஒரு காட்சிகளாகவோ அல்லது ஒரு சம்பவத்தை மையப்படுத்தியோதான் வந்துள்ளன. ஆனால், ‘நெஞ்சுக்கு நீதி’யின் ஒவ்வொரு காட்சிகளும் சாதிக்கொடுமைகளின்

வெவ்வேறு வடிவங்களை காட்சிப்படுத்தியுள்ளது.

அது, சாதிய ஆணவக்காரர்களின் நெஞ்சை குத்திக் கிழிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, ஒரு முன்னேட்டத்திலேயே சாலையில் சட்டப் புத்தகத்துடன் அம்பேத்கர், கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர், நீதி வழங்கும் காவல்நிலைய சுவற்றில் அம்பேத்கர் என மூன்றுமுறை அம்பேத்கரின் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன.

அம்பேத்கர் நிறைந்த இப்படியொரு முன்னோட்டம் தமிழ் சினிமாவில் முதல்முறை என கூறலாம் இந்தியில் வெளியான ’ஆர்டிகிள் 15’ என்பதாலும் கதைக்களமே அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் வழியே வழங்கப்படும் நீதி என்பதாலும் அதனை தமிழ் ஆக்கத்தில் சமரசமின்றி நேர்மையுடன் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சர், ஆட்சியில் இல்லாதபோது தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்,பல முறை இந்திய அரசியலை தீர்மானிக்கும் திராவிட

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.