குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி!

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவேந்தல் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் யாழின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக நாளை 17.05.2022 அன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு முன்பாக காலை10 மணி முதல் 12 மணி வரை இரத்ததான நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


.

இயலுமானவர்களை குருதிக்கொடை செய்ய அழைக்கிறோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.