பாலியல் தொல்லை - வாலிபருக்கு 17 ஆண்டு சிறை!


 அரியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.


பின்னர் அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்தும், பாலியல் தொல்லையும் அளித்ததாக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சார்ந்தவர் தீனதயாளன். இவர் உடையார்பாளையம் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். குவாகம் கிராமத்தைச் சார்ந்த காமராஜ் என்பவர் தனது தந்தை எழுதிக்கொடுத்த செட்டில் மென்ட் பத்திரத்தை திரும்ப கேட்டுள்ளார்.

பத்திரம் திரும்ப கொடுக்க வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என சார்பதிவாளர் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விருப்பம் இல்லாத காமராஜ், அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

17.4.2013 அன்று சார்பதிவாளர் தீனதயாளனிடம் காமராஜ் ரூ.4 ஆயிரம் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் தீனதயாளனை கையும், களவுமாக கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் தீனதயாளனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பு அளித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.