நிவாரண கப்பல் நாளை இலங்கை வருகை


தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் தமிழ்நாட்டின் மனிதாபிமான உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிய முதலாவது கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணிப்புரைக்கமைய, இலங்கைக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்பதாயிரத்து 200 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என்பன அடங்கியுள்ளன.

இந்த அத்தியாவசிய பொருடகள் சென்னை துறைமுகத்தில் கடந்த மே 18 ஆம் திகதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மனிதாபிமான உதவித்திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் மருந்துகளை வழங்கும் முதல் கட்ட தொகுதிபொருட்கள் இவை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மாநில சட்டமன்றத்தில் முன்மொழிந்த, இலங்கை மக்களுக்கான தமிழ்நாட்டின் மனிதாபிமான உதவி நிவாரணம் வழங்கும் பிரேரணைக்கு அமைவாக இவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.