மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு -நெற்ரெற்றால் யேர்மனி!📸

 மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள் யேர்மனியில் உள்ள நெற்ரெற்றால் என்ற சிறிய நகரத்தில் 14.05.2022 சனிக்கிழமை அன்று மாலை 17:00 மணியளவில் அந்நகர மக்கள் அனைவரும் ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் மண்ணிலே மரணித்த மாவீரர்களையும் உயிர்களைத் துறந்த மக்களையும் நினைவுகூர்ந்து உணர்வு பூர்வமாகத் தமது அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

 


நிகழ்வின் ஆரம்பமாகப் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது .பொதுச்சுடரினை தமிழீழ உணர்வாளரும் மாவீரர் வசந்தியின் மாமனாருமாகிய திரு ஸ்ரனிஸ்லவுஸ் திரவியநாதன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி,சுடர் ஒளி ஏற்றி,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.


அங்கு வந்த மக்களின் மனக்கண் முன்னே முள்ளி வாய்க்கால் மண்ணிலே நடந்த வலி சுமந்த நினைவுகளை தனது உரை மூலம் ஆசிரியர் திரு ஆலாலசுந்தரம் ஞானகுமார் கொண்டுவந்தார். தொடர்ந்து மாணவர்களின் கவிதைகள், விடுதலை நடனம், உரையாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.இறுதியாகஅன்று மக்களின் பசியைப் போக்கிய உப்புக் கஞ்சியை வழங்கி கனத்த மனதுடன் நிகழ்வினை நிறைவு செய்தனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.