முட்கம்பி காவல் எம்மை!!


 முட்கம்பி காவல் எம்மை
  மூடியிருக்கையில் யாருக்கும்

வலிக்கவில்லை
கஞ்சிக்கு நாம் கால்கடுக்க
கெஞ்சிநிற்கையிலே யாருக்கும்
வலிக்கவில்லை
அணுகுண்டுகள் ஆக்ரோசமாய்
உடல் பிளக்கையில் யாருக்கும்
வலிக்கவில்லை
அணுஅணுவாய் எம்மினம்
அடிமையாகையிலும் யாருக்கும்
வலிக்கவில்லை
இன்று
காஸிற்கும் பெற்றோலுக்கும்
கால்மணிநேரம் நிற்க
முடியவில்லை உங்களுக்கு
விலைவாசி என்றே
வீதியிலே கூவுகிறீர்கள்
வீட்டிற்கு அனுப்ப
இப்போதும்
எங்கள் வலிகளை நீங்கள்
உணரப்போவதில்லை
ஆம்!
எம்மினத்தின் வலிகளுக்கு
இவையெல்லாம் நிகரில்லை
ஆயினும்
எங்கள் மனம் வலிக்கிறது
உங்கள் நிலைமை கண்டு
வலிகண்ட இனமல்லவா ?
........................
வரிகள்:- ரேகா சிவலிங்கம்
10.54am

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.