கொடிகாமம் துயிலும் இல்லக்காணி ஆக்கிரமிப்பு தடுத்துநிறுத்தம்!📸

தனியாருக்குச் சொந்தமான 10.5 பரப்புக்காணியில் அமைந்திருந்த கொடிகாமம் துயிலும் இல்லம், 2009இன் பின்னர் இடித்து அழிக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரின் படைமுகாமாக மாற்றப்பட்டிருந்தது.


அந்நிலையில் இன்று அக்காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் நடைபெறவிருந்த அளவீட்டுப் பணிகள் எதிர்பினால் தடுத்துநிறுத்தப்பட்டது.


இதில் பொதுமக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி டொமினிக், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்


#இராணுவமயப்படுத்தல்

#land_grabbing

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.