போராடியும் தோல்வி அடைந்த சென்னை!

 


சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. அதில், நாணய சுழற்சியை வென்ற தலைவர் தோனி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தன. அதிகபட்சமாக மொயின் அலி 57 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 20வது ஓவரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 59 ஓட்டங்களும், அஸ்வின் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.